உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாராய ரெய்டு திருத்தணியில் 2 பேர் கைது

சாராய ரெய்டு திருத்தணியில் 2 பேர் கைது

திருத்தணி:கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் எத்தனால் அதிகளவில் கலந்த கள்ளச்சாராயம் குடித்து, 40க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். பலர் அரசு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருத்தணி வருவாய் கோட்டத்தில், மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசாபெருமாள் உத்தரவின் படி, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் திருத்தணி கோட்டம் முழுதும் சாராய வேட்டை நடத்தினர்.இதில் சாராயம் விற்று வந்த திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர்காலனி சேர்ந்த ஏகத்தா, 48, நெமிலி காலனி சேர்ந்த ரோஜா, 27 ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த, 15 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ