உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரிசி கடத்தலில் தேடப்பட்டவர் ஏர்போட்டில் கைது

அரிசி கடத்தலில் தேடப்பட்டவர் ஏர்போட்டில் கைது

சென்னை, சென்னையைச் சேர்ந்தவர் குமார் முகமது கலித், 29. இவர் மீது, ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில், சிவில் சப்ளை குற்றப்பிரிவு சி.ஐ.டி., போலீசார், கடந்த மூன்று மாதங்களாக தேடி வந்தனர்.இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களின் ஆவணங்களை, அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, குமார் முகமது கலித் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவருடைய ஆவணங்களை ஆய்வு செய்தபோது, சிவில் சப்ளை குற்றப்பிரிவு சி.ஐ.டி., போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என தெரிந்தது.இதையடுத்து அவரை, விமான நிலைய போலீசில் ஒப்படைத்து, சிவில் சப்ளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், குமார் முகமது கலித்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை