உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மேட்டுக்குப்பம் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் திக்திக் பயணம்

மேட்டுக்குப்பம் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் திக்திக் பயணம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சேகண்யம் கிராமத்தில் இருந்து மேட்டுக்குப்பம் வழியாக பொதிராங்குளம், பூங்குளம் கிராமம் வரை செல்லும் சாலை, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது.இந்த சாலைரயில், சேகண்யம் முதல் மேட்டுக்குப்பம் வரையிலான 3.5 கிலோமீட்டர் சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்று படுமோசமான நிலையில் உள்ளது.சாலைக்கான எந்த அடையாளமும் இன்றி கரடு முரடான காட்டு பாதை போன்று காட்சியளிக்கிறது. உமிப்பேடு, இஞ்சூர்மேடு, மேட்டுக்குப்பம், பொதிராங்குளம் உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.தினசரி தேவை மற்றும் அவசர தேவைக்காக கூட இச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என, கிராம மக்கள் புலம்பி வருகின்றனர்.எனவே, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம், இச்சாலையைப் புதுப்பிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ