உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் தடுப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி

நெடுஞ்சாலையில் தடுப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி

திருவாலங்காடு, திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை 24 கி.மீ., துாரம் உடையது. இச்சாலையில் திருவாலங்காடு அருகே கூடல்வாடி கிராமம் அமைந்துள்ளது.இங்குள்ள ஏரி அருகே, 50 மீட்டர் நீள சாலையில் இரண்டு இடங்களில் வளைவு உள்ளது. திருவள்ளூர் நோக்கி செல்லும் வாகனங்கள் வேகமாக செல்லும் போது, வளைவு பகுதியில் வலதுபுறம் ஏறி செல்வதால், அரக்கோணம் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வந்தனர்.கடந்த ஓராண்டில் மட்டும், 50க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. எனவே, விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து, வளைவு சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ