மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
21 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
21 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
21 hour(s) ago
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், நெடியம் காலனியில் இருந்து நகரி செல்லும் சாலையோரம் கிராம பொதுகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு நெடியம் மலையில் இருந்து நீர்வரத்து உள்ளது.இந்த குளக்கரையில் இருந்து, 100 மீட்டர் தொலைவில், கொசஸ்தலை ஆறு பாய்கிறது. இதனால், நிலத்தடி நீரூற்றும் குளத்திற்கு உள்ளது. நீர்வளம் மிக்க இந்த பகுதியில், நெல் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு குளமும், ஆறும் ஆதாரமாக அமைந்துள்ளன.இந்நிலையில், இக்குளம் பராமரிப்பு இன்றி சீரழிந்து வருகிறது. குளத்திற்கு கரையும், படித்துறையும் இல்லை. மேலும், குளத்தில் கோரை புற்களால் புதர் மண்டிக்கிடக்கிறது.வற்றாத நீர்வளத்துடன் விளங்கும் இந்த குளம், புதரில் மறைந்து தடம் தெரியாமல் மறையும் அபாய நிலையில் உள்ளது. சுற்றுப்பகுதியின் நீர்வளத்தை பாதுகாக்கும் விதமாக குளத்தை துார் வாரி சீரமைக்கவும், குளத்திற்கு படித்துறையுடன் சுற்றுச்சுவர் அமைக்கவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago