உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூதாட்டியை தாக்கிய இருவருக்கு வலை

மூதாட்டியை தாக்கிய இருவருக்கு வலை

திருத்தணி:திருத்தணி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பம்மாள், 65. இவர் வீட்டுவேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் நடந்து சென்றார். அப்போது, கஞ்சா போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள் மூதாட்டியை கல்லால் தாக்கி, அவர் வைத்திருந்த, 700 ரூபாயை பறித்து சென்றனர்.அதே தெருவில், திருப்போரூரை சேர்ந்த பலராமன், 50 என்ற மாற்றுத்திறனாளி ஒரு வீட்டின் முன் படுத்திருந்தார்.அவரையும் அந்த வாலிபர்கள் தாக்கி, அவர் வைத்திருந்த, 1,500 ரூபாய்யை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மூதாட்டி மற்றும் பலராமனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை