உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஒரக்காடு - அருமந்தை சாலையோர பள்ளங்களால் அவதி

ஒரக்காடு - அருமந்தை சாலையோர பள்ளங்களால் அவதி

சோழவரம் : சோழவரம் அடுத்த ஒரக்காடு - அருமந்தை இடையேயான, 3 கி.மீ., சாலை, குண்டும் குழியுமாக மாறியதை தொடர்ந்து, கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், புதுப்பிக்கப்பட்டது.சாலை, ஒரு அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டதால், சாலையோரங்கள் தாழ்வாக மாறியது. இதனால் சாலையில் இருந்து வீடு, கடைகளுக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இருசக்கர வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்த முடிவதில்லை. அவற்றை கீழே இறக்கினால், மீண்டும் சாலைக்கு கொண்டு செல்ல, மற்றொருவரின் உதவி தேவைப்படுகிறது.இந்த சாலையில் உள்ள ஆத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் அவசர ஊர்திகளும் சிரமப்படுகின்றன. நோயாளிகளும் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும்போது, சாலையோரங்களில் செம்மண் நிரப்பி சமன்படுத்த வேண்டும் என வியாபாரிகள், கிராமவாசிகள் வலியுறுத்தினர்.ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர், சாலையோரங்களை சமன்படுத்தும் பணிகளை கிடப்பில் போட்டதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.பொன்னேரி நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை