உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பஸ் நிலைய நுழைவாயில் சேதம் சீரமைக்க பயணியர் கோரிக்கை

பஸ் நிலைய நுழைவாயில் சேதம் சீரமைக்க பயணியர் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: தமிழக அரசின் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பேருந்து பணிமனை ஊத்துக்கோட்டையில் உள்ளது. இங்கிருந்து சென்னை, செங்குன்றம், திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திர மாநிலம் நாகலாபுரம், பிச்சாட்டூர் மற்றும் சுற்றியுள்ள இடங்களுக்கு பேருந்து இயக்கப்படுகின்றன. இந்த பகுதிக்கு செல்லும் பேருந்துகள், பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று பயணியரை ஏற்றிச் செல்கின்றன.இதுதவிர, நிலையத்திற்கு தனியார் மற்றும் மாநகர பேருந்துகள், சென்று வருகின்றன. இந்நிலையில், பேருந்து நிலைய நுழைவாயில் சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், பேருந்துகள் நுழையும்போது குலுங்குவதால், வயதானவர்கள், சிறுவர்கள் அவதிப்படுகின்றனர்.எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பேருந்து நிலைய நுழைவாயிலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை