உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குளமானது சிப்காட் சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்

குளமானது சிப்காட் சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு உட்பட்ட வடக்கு சிப்காட் சாலை வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த சாலையில், சிப்காட் நான்காவது குறுக்கு சாலை சந்திக்கும் இடத்தில், சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை பெய்தது. அப்போது, மேற்கண்ட சாலை சந்திப்பில் மழை நீர் தேங்கி, குளம் போல் மாறியது. இதனால், நேற்று நாள் முழுதும் அவ்வழியாக கடந்து சென்ற இலகு ரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளம் மேலும் பெரியதாக மாறும் முன், உடனடியாக சீரமைப்பு பணிகளை, கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். அந்த சந்திப்பில் மழைநீர் வடிந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை