உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி அரசு மருத்துவமனையில் விரைவில் ரத்தவங்கி செயல்படும்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் விரைவில் ரத்தவங்கி செயல்படும்

பொன்னேரி:பொன்னேரி அரசு மருத்துவமனையில் நேற்று, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார்.மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள், பணியாளர்கள் இருப்பு உள்ளிட்டவை குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது நோயாளிகள், பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரத்தவங்கி பிரிவு அமைக்கப்பட்டு, செயல்படாமல் இருக்கிறது. நீண்ட நாள் கோரிக்கையான ரத்த வங்கியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.அதற்கென தனி மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமித்து, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்த பின் ரத்த வங்கியை விரைவாக பயனுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நோயாளிகளிடம் தெரிவித்தார்.தொடர்ந்து, பொன்னேரி அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், ஆய்வுக்கூடங்கள் அடங்கிய புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதால், அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டார்.மருத்துவமனையில் அனைத்து காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.ஆய்வின் போது ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குனர் விசுவநாதன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சேகர் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ