| ADDED : மே 12, 2024 12:04 AM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, சென்னேரி கிராமத்தில் ஏரிக்கரை ஓரத்தில் உள்ளது கன்னியம்மன் கோவில். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம், கத்திரி வெயில் துவங்கியதும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். நேற்று முன்தினம் காலை, ஊத்துக்கோட்டை ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் அருகில் உள்ள மாரியம்மன் மண்ணடியில் இருந்து கலிங்கிரெட்டி, கடாரத்தை சேர்ந்த பெண்கள், 50க்கும் மேற்பட்டோர் பொங்கல் பானை, பழ தட்டுகளுடன் ஊர்வலமாக கோவிலை அடைந்தனர்.அங்கு அம்மனுக்கு இரண்டு ஆடுகள் பலியிட்டு, பொங்கல் மற்றும் பழ வகைகளை படைத்து, நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் திரளான ஆண்கள், பெண்கள், சிறுவர் - சிறுமியர் கலந்து கொண்டனர். பின் அனைவருக்கும் விருந்து படைக்கப்பட்டது.