உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டி - சென்றாயன்பாளையம் சாலை சீரமைப்பு பணி அம்போ

பூண்டி - சென்றாயன்பாளையம் சாலை சீரமைப்பு பணி அம்போ

திருவள்ளூர்:பூண்டி - சென்றாயன்பாளையம் சாலை அமைக்கும் பணி, ஜல்லி கற்கள் போட்டு பல மாதங்களாகியும் நிறைவடையாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.பூண்டி ஒன்றியம், சென்றாயன்பாளையம், திருப்பேர் வழியாக ராமஞ்சேரிக்கு திருவள்ளூரில் இருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.இவ்வழியாக, 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவர்கள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிக்கும் திருவள்ளூர் வந்து செல்ல வேண்டும்.திருப்பேர் கூட்டு சாலையில் இருந்து பூண்டி வரை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை வழியாக வந்து செல்கின்றனர். இச்சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், பேருந்து மற்றும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றன. மேலும், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வனத்துறையின் அனுமதி பெற்று, நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்கும் பணி மேற்கொண்டனர்.பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, திருப்பேர் கூட்டு சாலை வரை, 3.45 கி.மீட்டர் துாரத்திற்கு, 2 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை சீரமைப்பு பணி, கடந்த மூன்று மாதத்திற்கு முன் துவங்கியது.தற்போது, 1.5 கி.மீட்டர் துாரம் மட்டுமே தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியில், ஜல்லிக் கற்கள் கொட்டி வைத்து, ஒன்றரை மாதங்களாகியும் இதுவரை பணி துவங்கவில்லை. இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, மாவட்ட கலெக்டர், மீதமுள்ள சாலை பணியை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ