உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தடுப்பு நடவடிக்கை 9 நாட்களில் அம்போ கலெக்டர் அலுவலகம் அருகில் மீண்டும் ஆக்கிரமிப்பு

தடுப்பு நடவடிக்கை 9 நாட்களில் அம்போ கலெக்டர் அலுவலகம் அருகில் மீண்டும் ஆக்கிரமிப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. நிறுத்தம் அருகே பேருந்துகள் வரும் வகையில், போலீசார் 'பேரிகார்டு' வைத்துள்ளனர்.ஆனால், பேருந்துகள் செல்லும் வழியை சிலர் வாகனங்களை நிறுத்தி, வெங்காயம், தக்காளிமற்றும் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். இதை வாங்க வருவோர் சாலையிலேயே தங்களது வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், பேருந்துகள் செல்ல முடியாமல், சாலையில் நிறுத்தப்படு கின்றன.இதனால், பயணியர் சாலை நடுவில் நின்று, பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, திருவள்ளூர் நகர காவல் துறையினர், கடந்த 9ம் தேதி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து, எஸ்.பி., அலுவலக நுழைவாயில் வரை கடைகள் அமைக்காத வகையில், தடுப்புக் கயிறு கட்டினர்.இந்த தடுப்பை, ஒன்பது நாட்களில் போலீசார் அகற்றிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, வியாபாரத்தை துவக்கி உள்ளனர்.கலெக்டர் அலுவலகநுழைவாயில் முதல்எஸ்.பி., அலுவலக நுழைவாயில் வரை இந்த ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் முளைத்துள்ளன.எனவே, ஆக்கிர மிப்பை அகற்ற போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை