உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தனியார் வேலை வாய்ப்பு முகாம் 47 பேருக்கு பணி நியமன ஆணை

தனியார் வேலை வாய்ப்பு முகாம் 47 பேருக்கு பணி நியமன ஆணை

திருவள்ளூர் : தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், 47 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று முன்தினம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில், 36 நிறுவனங்கள் பங்கேற்றன.இந்த முகாமில் 119 பேர் பங்கேற்றதில், 47 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணையை வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் விஜயா வழங்கினார்.இரண்டாம் கட்ட தேர்விற்கு 74 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ