உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேர்வாய் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

தேர்வாய் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

ஊத்துக்கோட்டை:கும்மிடிப்பூண்டி ஒன்றியம், தேர்வாய் கிராமத்தில் இயங்கி வருகிறது அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 300க்கும் அதிகமான மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் நேற்று பரிசளிப்பு விழா நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். தேர்வாய் ஊராட்சி மன்ற தலைவர் முனிவேல் வரவேற்றார். திருவள்ளூர் காங்.,- எம்.பி., சசிகாந்த் செந்தில் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை