| ADDED : ஜூலை 28, 2024 07:08 AM
ஸ்டேஷன் மாஸ்டரிடம் வாக்குவாதம்அரக்கோணத்தில் இருந்து சென்னை, ஆவடி, அம்பத்துார், பத்திரபாக்கம் பகுதிகளில் பணிபுரியும் பயணியர், 10,000த்திற்கும் மேற்பட்டோர், தினமும் காலை அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு, மீண்டும் மாலை நேரங்களில் மின்சார ரயில்கள் வாயிலாக வீடு திரும்புகின்றனர். நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து இரவு 7:00க்கு புறப்பட்ட ரயில், 8:40க்கு புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து சிக்னல் தரப்பட்டு, 9:40க்கு அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. இந்த கால தாமதம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. புளியமங்கலத்தில் இருந்து அரக்கோணம் வருவதற்கு, மூன்று நிமிடம் மட்டுமேயாகும். ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பயணியர் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து பயணியர் கூறுகையில், 'சிக்னல் இயக்கும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் போதுமான பயிற்சி இல்லை. உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இனிவரும் காலங்களில் சரியான முறையில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.