உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூடிய பாதையை திறக்க கோரி வேப்பம்பட்டில் ரயில் மறியல்

மூடிய பாதையை திறக்க கோரி வேப்பம்பட்டில் ரயில் மறியல்

திருவள்ளூர்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்துள்ள கடவுப்பாதை 13ல் அமைந்துள்ளது வேப்பம்பட்டு ரயில் நிலையம். இங்குள்ள கடவுப்பாதை மூடப்பட்ட நிலையில் அருகில் உள்ள பாதையை இருசக்கர வாகனங்களில் செல்வோர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி இருசக்கர வாகனம் செல்லும் பாதையை ரயில்வே நிர்வாகம் அடைத்து விட்டனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் அப்பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதில் ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சென்னை, திருவள்ளூர் நோக்கி புறநகர் மின்சார ரயில்கள் செல்லும் கடவுப்பாதையில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியே வந்த இரு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணியர் கடும் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்