| ADDED : ஆக 02, 2024 10:29 PM
பொன்னேரி:பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த மாதம், வழக்கத்தை விட தென்கிழக்கு பருவமழை அதிகமாக இருந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, அவற்றில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன.இதனால் கடந்த சில தினங்களாக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகதார நிலையங்களில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அதிகளவில் நோயாளிகள் வருகின்றனர்.அதில் ரத்த தட்டணுக்கள் குறைந்து, தினமும், 20 - 30 நோயாளிகள் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். கொசுவினால் காய்ச்சல் அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.பொன்னேரி, மீஞ்சூர் நகரப்பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொசுமருந்து அடிப்பதில்லை. இதனால் அவை பன்மடங்கு அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.நாளுக்கு நாள் காய்ச்சலால் பாதிக்கப்படுவர்கள் அதிகரித்து வரும் நிலையில், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களிலும், பொன்னேரி, மீஞ்சூர் நகரப்பகுதிகளிலும், உடனடியாக கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.