மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
22 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
22 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
22 hour(s) ago
பொன்னேரி: பொன்னேரியில் இருந்து ஆலாடு, சிவபுரம், ரெட்டிப்பாளையம் வழியாக தத்தமஞ்சி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரங்களில் முள்செடிகள் வளர்ந்து, அவை சாலைவரை பரவி இருக்கின்றன.இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், முள்செடிகள் உள்ள பகுதிகளை கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றனர். முள்செடிகள் வாகன ஓட்டிகளின் முகத்தில் பட்டு சிராய்ப்புகளை ஏற்படுத்துகிறது.மேலும் வளைவு பகுதிகளில் முள்செடிகள் இருப்பதால், இரவு நேரங்களில் எதிரில் வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை. இதனால் விபத்துக்களும் ஏற்படுகிறது. கடந்த, 24ம் தேதி இந்த சாலையில் உள்ள கொளத்துார் பகுதியில், சாலை வளைவில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில், ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் நிலையில், சாலையோர முள்செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago