உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீன் சுத்தம் செய்யும் இடத்தில் கூரை அமைக்க கோரிக்கை

மீன் சுத்தம் செய்யும் இடத்தில் கூரை அமைக்க கோரிக்கை

பழவேற்காடு:பழவேற்காடு மீன்இறங்குதளம் பகுதியில், விற்பனை கூடம் அமைந்து உள்ளது. பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஏராளமானவர்கள் இங்கு வந்து, மீன், நண்டு, இறால் உள்ளிட்டவைகளை வாங்கி செல்கின்றனர்.மீன், இறால் உள்ளிட்டவைகளை வாங்குபவர்கள் அதை, அங்குள்ள மீனவ பெண்களிடம் கொடுத்து அறுத்து சுத்தம் செய்து, ஐஸ் பதப்படுத்தி வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.மீன், இறால், நண்டு ஆகியவற்றை அறுத்து சுத்தும் செய்யும் பணியில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் மீன் விற்பனை கூடத்தின் முகப்பில், திறந்தவெளியில் அமர்ந்து பணிபுரிகின்றனர்.திறந்தவெளியாக இருப்பதால் மழை, வெயில் காலங்களில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்காலிக கூரையாக பிளாஸ்டிக் ஷீட்களை போட்டு வைக்கின்றனர். அவை சில தினங்களில் சேதம் அடைந்து விடுகிறது.மீன், இறால் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வசதியாக, கூரை அமைத்து தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி