உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவாபுரி கோவில் வெளிப்புற பகுதியை துாய்மையாக பராமரிக்க கோரிக்கை

சிறுவாபுரி கோவில் வெளிப்புற பகுதியை துாய்மையாக பராமரிக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர்.கோவில் உட்புற வளாகம் எப்போதும் துாய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளிப்புறத்தில் ஆங்காங்கே கழிவுகள் குவியல் காணப்படுகின்றன. உடனுக்குடன் அந்த கழிவுகள் அகற்றப்படாததால், அங்கு வரும் பக்தர்கள் முக சுழிப்புக்கு ஆளாகின்றனர். மேலும் கோவிலின் வெளிப்புற பகுதியில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.சின்னம்பேடு ஊராட்சி நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் ஒன்றிணைந்து கோவில் வெளிப்புற பகுதியை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ