உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் நிலைய சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

ரயில் நிலைய சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கவரைப்பேட்டை பகுதியின் பிரதான சாலையான ரயில் நிலைய சாலையில், நுாற்றுக்கணக்கான கடைகள், வீடுகள் உள்ளன. உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தனியார் தொழிற்சாலை வேலைக்கு செல்வோர் என, தினமும் ஆயிரக்கணக்கான ரயில் பயணியர் அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி ஒன்றிய அலுவலக பராமரிப்பில் உள்ள அந்த சாலையின் ஓரம் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகளால் குறுகிய அந்த சாலையை கடப்பது என்பது, வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் மிக பெரிய சவாலாக இருந்து வருகிறது.அந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என ரயில் பயணியரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி