உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீருடன் கழிவுநீர் கலப்பால் சாலை மறியல்

குடிநீருடன் கழிவுநீர் கலப்பால் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, ஆறாவது வார்டுக்கு உட்பட்ட ஒரு பகுதியில், 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக மேற்கண்ட பகுதியில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பகுதிவாசிகள் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை ஏதும் எடுக்கப்படா நிலையில், நேற்று கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் அவர்களிடம் உடனடியாக தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து சீரமைப்பு பணிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை