உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 4 நாட்களாக குடிநீர் வினியோகம் கட் காலிகுடங்களுடன் சாலை மறியல்

4 நாட்களாக குடிநீர் வினியோகம் கட் காலிகுடங்களுடன் சாலை மறியல்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் தெருக் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கி வருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக தெருக் குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் அவதிப்பட்டு வந்தனர். இதற்கு காரணம் மின்மோட்டார் பழுது என கூறப்படுகிறது. மின்மோட்டரை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று நொச்சிலி—கே.ஜி.கண்டிகை மாநில நெடுஞ்சாலையில் காலி குடங்கள் வைத்தும் வாகனங்கள் செல்லாதவாறு முட்செடிகள் வெட்டி சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் சிறுகுமி ஊராட்சி மன்ற தலைவர் வந்து மக்களிடம் சமரசம் செய்து, டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கப்படும் என உறுதி கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ