| ADDED : மே 09, 2024 01:18 AM
பொதட்டூர்பேட்டை:பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான், 68; சரக்கு வாகன ஓட்டுனர். இவர், அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து நேற்று முன்தினம் வாழைப்பழம் லோடு ஏற்றிக்கொண்டு, காஞ்சிபுரம் சென்றார்.இதையடுத்து, வாழைப்பழங்களை இறக்கி விட்டு, மீண்டும் ஆர்.கே.பேட்டை வழியாக வந்து கொண்டிருந்தார். நள்ளிரவு 12:00 மணியளவில், நாதன்குளம் அருகே வேகத்தடையை கடந்து செல்லும் போது, வாகனத்தின் வேகத்தை குறைத்து இயக்கினார்.இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து, அங்கு இருசக்கர வாகனத்தில் காத்திருந்த இரண்டு இளைஞர்கள், அப்துல் ரகுமானின் வாகனத்தை மடக்கி நிறுத்தினர்.உடனே, அவரிடம் இருக்கும் பணத்தை தரும்படி இளைஞர்கள், அப்துல் ரகுமானை மிரட்டினர். அப்துல் ரகுமான் தன்னிடம் பணம் ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்துல் ரகுமானை தாக்கி விட்டு தப்பினர். காயமடைந்த அப்துல் ரகுமான், திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.