உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரிசி கடை பூட்டை உடைத்து ரூ.1.10 லட்சம் திருட்டு

அரிசி கடை பூட்டை உடைத்து ரூ.1.10 லட்சம் திருட்டு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, தொம்பரம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 42. இவர் ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் சாலையில், தொம்பரம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே அரிசி கடை நடத்தி வருகிறார். கடந்த, 16ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை கடையை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் வைத்திருந்த 1.10 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில், மூன்று நபர்கள் உள்ளே புகுந்து பணத்தை எடுத்தது தெரியவந்தது. ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை