| ADDED : மே 03, 2024 08:47 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார், 27. இவர், திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், நேற்று காலை அவரை மொபைல் போனில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள், கடன் தவணை தருவதாக அவரை திருவள்ளூரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளனர். அங்கு தனியாக இருசக்கர வாகனத்தில் வந்த அஜித்குமாரை. மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அவர் முகத்தில் மிளகாய் பொடி துாவி சரமாரியாக வெட்டி விட்டு தப்பியுள்ளனர். தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து, விசாரித்து வருகின்றனர்.