உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொது கழிப்பறையை ஆக்கிரமித்து கடை

பொது கழிப்பறையை ஆக்கிரமித்து கடை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் பொது கழிப்பறை கட்டப்பட்டது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை அமைக்கப்படுவதால், 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவர். அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்கவும், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு ரயில் மார்க்கமாக வந்து செல்லும் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில், கழிப்பறை உள்ளது.இந்நிலையில் சிலர் இந்த கழிப்பறையை ஆக்கிரமித்து சுவரை இடித்து கூடுதல் கட்டடத்தை ஏற்படுத்தி கடையாக மாற்றி உள்ளனர். இதுகுறித்து வி.ஏ.ஓ., மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ