உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாசலில் மது குடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண்ணின் மண்டை உடைப்பு

வாசலில் மது குடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண்ணின் மண்டை உடைப்பு

எம்.கே.பி.நகர்:எம்.கே.பி.நகர், எஸ்.ஏ.காலனி, மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கவிதா, 24; தனியார் நிறுவன ஊழியர்.நேற்று முன்தினம் நள்ளிரவு, இவரது வீட்டு வாசல் பகுதியில் அமர்ந்து ஐந்து பேர் மது குடித்தனர். சத்தமாக பேசி அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.இவர்களின் செயலால் வீட்டில் இருந்து வெளியே வந்த கவிதா, எழுந்து செல்லும்படி அவர்களை கண்டித்தார். போதையில் இருந்த அவர்கள், கவிதாவை தகாத வார்த்தைகளால் பேசி, பாட்டில்களால் தாக்கினர். இதில், அவருக்கு தலையிலும், கைகளிலும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. கவிதாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இந்நிலையில், சம்பவ இடத்திற்கு, அந்த ஐந்து பேரும் மீண்டும் வந்தனர். அப்போது சுற்றிவளைத்த பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.எம்.கே.பி.நகர் போலீசார், கொலை முயற்சி, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனியை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கரண், 19, அவரது சகோதரர்கள் பிரசாந்த், 22, குணா, 25, மற்றும் வியாசர்பாடி வசந்தகுமார், 22, பரத்ராஜ், 23, ஆகிய ஐவரையும் கைது செய்தனர்.இதில் கைது செய்யப்பட்ட குணா, வசந்தகுமார் ஆகியோர், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆவர். கரண் மற்றும் வசந்தகுமார் மீது, தலா எட்டு குற்ற வழக்குகளும், குணா மீது ஐந்து குற்ற வழக்குகளும், பிரசாந்த் மீது மூன்று குற்ற வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை