உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு குறித்து எஸ்.பி., ஆய்வு

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு குறித்து எஸ்.பி., ஆய்வு

திருவள்ளூர்: மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் முதுகலை மருத்துவ பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இதை கண்டித்து நாடு முழுதும் உள்ள மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அங்கு பணியில் இருந்த செவிலியர்கள், மருத்துவர்களிடம் குறைகளை கேட்டு, வெளிநபர்களின் தொந்தரவு பாலியல் புகார்கள் ஏதேனும் உள்ளதா என கேட்டறிந்தார்.அது போன்று ஏதும் இல்லை. ஆனால் நோயாளிகளுடன் வரும் நபர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட்டு தாக்குதல் நடத்த முற்படுவதாக தெரிவித்தனர்.எனவே மருத்துவமனையில் போதிய போலீசார் பணியில் அமர்த்த வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். வரும் காலங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடும் போலீசார் அரசு மருத்துவமனையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படும், என எஸ்.பி., தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை