திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு, சென்னையில் ஆன்மிக சுற்றுலா வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில், சென்னையில் இருந்து ஆன்மிக சுற்றுலா வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோளை ஏற்ற தமிழக சுற்றுலா துறை, சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு, ஒன்று மற்றும் இரண்டு நாட்கள் கோவில் சுற்றுலாவாக, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பேருந்தின் மூலம் அழைத்து சென்று வரும் வசதி ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.ஒருநாள் கோவில் சுற்றுலா, காலை 6:00 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள, சுற்றுலா வளர்ச்சிக்கழக வளாகத்தில் புறப்படும்.திருமழிசை ஜெகநாதப்பெருமாள், திருமழிசை ஆழ்வார் கோவில், திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோவில்; திருவள்ளூர் வீரராகவர் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய இடங்களுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, இரவு 7:00 மணிக்கு சென்னை திரும்புவர். இதற்கு கட்டணம், 1,300 - 1,400 ரூபாய்.இரண்டு நாட்கள் சுற்றுலாவில், திருப்பதி, திருத்தணி முருகன் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோவில், திருமழிசை ஜெகநாத பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் கோவில். இதற்கு கட்டணம், ஒருவருக்கு 6,600 - 7,500 ரூபாய்; குழந்தைகளுக்கு 4,300 - 4,500 ரூபாய்.இந்த சுற்றுலாவிற்கு தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.comஎன்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், விபரங்களுக்கு 91769 95870, 1800 4231111, 044 -- 25333333, 044- - 25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.