| ADDED : மே 29, 2024 08:07 PM
ஆவடி:ஆவடி அடுத்த மேலப்பேடு பகுதியில் நேற்று நள்ளிரவு, வெங்கல் வனத்தில் இருந்து ஒன்றரை வயது புள்ளி மான் வழிதவறி வந்துள்ளது. நாய்கள் துரத்தியதில், மேலப்பேடு பகுதியில், நீரில்லா கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது.நேற்று காலை 6:00 மணி அளவில், பகுதி வாசிகள் பார்த்து, செங்குன்றம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குழிக்குள் இறங்கிய மீட்பு குழுவினர், கயிறு கட்டி, மயங்கிய நிலையில் புள்ளி மானை மீட்டனர். மீட்கப்பட்ட புள்ளி மானை மேலக்கொண்டையார் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் புள்ளி மான் இறந்தது தெரிந்தது.