உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுமி திருமணம் நிறுத்தம்

சிறுமி திருமணம் நிறுத்தம்

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு நேற்று திருமணம் நடக்க இருப்பதாக மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர் ஞானதர்ஷினிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், குழந்தைகள் நல அலுவலர்கள் விஜயா, லோகேஷ் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.அதே பகுதியை சேர்ந்த சிறுமியின் உறவினரான மகேஷ், 18 என்பவருடன் திருமணம் நடைப்பெற இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அலுவலர்கள் சிறுமியின் குடும்பத்தினரிடம் எச்சரிக்கை விடுத்து சிறுமியை மீட்டு வாலாஜா காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி