| ADDED : ஜூன் 20, 2024 09:24 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை ஓரம் துராப்பள்ளம் பஜார் பகுதி அமைந்துள்ளது. பஜார் பகுதியில், 60க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் இயங்கி வந்தன.சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, மேற்கண்ட கடைகள் அனைத்தும் மூன்று மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டன. வாழ்வாதாரம் பாதித்து வியாபாரிகள் தவித்து வரும் நிலையில், அதே பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் நிரந்தர இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று, கும்மிடிப்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தை, நடைபாதை பெண் வியாபாரிகள், 25 பேர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின் மனு ஒன்றை பி.டி.ஓ., அலுவலகத்தில் கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.