உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தத்தால் அவதி

நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தத்தால் அவதி

திருவள்ளூர்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வெள்ளவேடு அருகே அமைந்துள்ளது, நேமம் கிராமம்.இங்கிருந்து, சென்னை மற்றும் திருவள்ளூருக்கு பணி நிமித்தமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் என, தினமும் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.இப்பகுதியில் நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால், பேருந்துக்காக காத்து நிற்கும் அப்பகுதிவாசிகள் மற்றும் மாணவ, மாணவியர் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பயணியர் சிரமம்

எனவே, மாவட்ட நிர்வாகம் நேமம் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கீழச்சேரி ஊராட்சி. தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்காலனி பகுதியில் உள்ள நிழற்குடையை பயன்படுத்தி அப்பகுதிவாசிகள் பேரம்பாக்கம், அரக்கோணம் சென்று வருகின்றனர். இந்த நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாததால், சேதமடைந்து விளம்பரம் ஒட்டும் இடமாக குப்பை நிறைந்து மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் இப்பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பயணியர் நிழற்குடையை சீரமைப்பது குறித்து ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது இப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென மேட்டுக்காலனி பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ