உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

கும்மிடிப்பூண்டி:கவரப்பேட்டை அடுத்த தண்டலச்சேரி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி சவும்யா, 24. இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.நேற்று காலை, கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த சவும்யா, துாக்குபோட்டு கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு, கீழ்முதலம்பேடு ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து கவரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி, இரண்டு ஆண்டுகளே ஆனதால் பொன்னேரி ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ