உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இருளில் மிதக்கும் மாவட்ட பெருந்திட்ட வளாகம் இரவில் சமூக விரோதிகள் கும்பல் அட்டகாசம்

இருளில் மிதக்கும் மாவட்ட பெருந்திட்ட வளாகம் இரவில் சமூக விரோதிகள் கும்பல் அட்டகாசம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லுாரி உள்ளன.மேலும், முதன்மை கல்வி அலுவலகம், வனத்துறை, தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை, ஆயுதப்படை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு குடோன் உள்ளிட்ட முக்கியத்துவமான அலுவலகங்கள் உள்ளன.கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் இக்கட்டடங்கள் அமைந்துள்ளதால், இரவில் போதுமான மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவில் இருளில் மிதக்கும் இப்பகுதிகளில், சமூக விரோதிகள் மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், டோல்கேட்டில் இருந்து அரசு மருத்துவக் கல்லுாரி வரை உள்ள சாலையில், தனியார் தொழிற்சாலை வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் மாறி விட்டது.இதனால், இரவு நேரத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரிவோர் இச்சாலையில் வர கடும் அச்சப்படுகின்றனர்.மேலும், பொதுப்பணித் துறை கட்டடம், அரசு கருவூலம் போன்ற அலுவலகங்களும் இங்கு உள்ளது. இரவு நேரத்தில் ஊழியர்கள், வெளியில் இருந்து வரும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் இச்சாலையில் பயணிக்க கடும் அச்சப்படுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாவட்ட பெருந்திட்ட வளாகம் முழுதும் மின்விளக்கு அமைக்க வேண்டும். இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் தொல்லையை தடுக்க, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ