உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டாஸ்மாக் கடையில் பாம்பு அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

டாஸ்மாக் கடையில் பாம்பு அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வள்ளியம்மாபுரத்தில், இரண்டு டாஸ்மார்க் கடைகள் இயங்கி வருகின்றன.இந்த நிலையில், நேற்று இரவு 8:00 மணியளவில், முதல் டாஸ்மாக் கடையில் திடீரென 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்தது.இதை பார்த்த மேலாளர் மற்றும் விற்பனையாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். மேலும், பக்கத்து கடையில் மதுபானங்கள் வாங்கிக் கொண்டிருந்த 'குடி'மகன்களும் தலைதெறிக்க ஓடினர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருத்தணி தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி டாஸ்மாக் கடையில் புகுந்த சாரை பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ