உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கங்கையம்மன் ஜாத்திரை விழா கிராமப்புறங்களில் கோலாகலம்

கங்கையம்மன் ஜாத்திரை விழா கிராமப்புறங்களில் கோலாகலம்

திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் மற்றும் சத்திரஞ்ஜெயபுரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் கங்கையம்மன் ஜாத்திரை விழா நடந்தது.இதையொட்டி, காலையில் அம்மன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில் பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.இரவு 7:00 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் மற்றும் பூகரம் சிறப்பு அலங்காரத்தில் கிராமங்களில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீதியுலா வந்தது.இரவு 10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், தொடர்ந்து நாடகமும் நடந்தது.l ஆர்.கே.பேட்டை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் நேற்று கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நடந்தது. பக்தர்கள், தங்களின் வீடுகளில் கங்கையம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். வீடுகளில் நடந்த சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்கள், தங்களின் நேர்த்திக்கடனாக மாறுவேடம் தரித்து, தெருக்களில் வலம் வந்தனர். - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ