| ADDED : ஜூலை 17, 2024 10:33 PM
திருத்தணி:திருத்தணி பெரியார் நகரில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, நேற்று மதியம் மர்மநபர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் வந்தார்.பின்னர் கோவிலில் இருந்த பூசாரி யசோதம்மாளிடம் மர்ம நபர் தேங்காய், எலுமிச்சை பழம் கொடுத்து, எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. ஆகையால் எலுமிச்சை பழம் அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து தருமாறு கூறியுள்ளார்.இதை நம்பிய யசோதம்மா, தேங்காய் உடைப்பதற்கு வெளியே வந்த போது, மர்ம நபர் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க தாலி செயினை திருடிவிட்டு தப்பியோடினார்.இது குறித்து யசோதம்மா அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து, அரக்கோணத்தைச் சேர்ந்த சதீஷ், 27, என்பவரை கைது செய்து, தாலி செயினை பறிமுதல் செய்தனர்.