உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தந்தையை வெட்டிய மகனுக்கு வலை

தந்தையை வெட்டிய மகனுக்கு வலை

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம் கசவநல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம், 49.இவர் தன் வீட்டின் அருகே கிறிஸ்துவ தேவாலயம் நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது மனைவி சாந்திக்கும் கடந்த ஒரு சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதனால் மனைவி சாந்தி மகன் ஷியாம் ஆகியோர் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஷியாம் மற்றும் சாந்தி ஆகியோர் நித்தியானந்தனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதில் ஆத்திரமடைந்த ஷியாம் நித்தியானந்தத்தை அரிவாளால் வெட்டியதில் அவரது தலை, காது, கைகளில் வெட்டு விழுந்துள்ளது.காயமடைந்தவரை அருகில் உள்ளவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். கடம்பத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை