உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூச்சி மருந்து குடித்தவர் பலி

பூச்சி மருந்து குடித்தவர் பலி

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த சேலைகண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 59; விவசாயி. இவர், கடந்த 30ம் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் விவசாய பயன்பாட்டிற்காக வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை மது என நினைத்து குடித்து விட்டார். அவரை மீட்ட உறவினர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கன்னியப்பன் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மகன் சதீஷ் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை