உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பரிதாப நிலையில் சாலைகள் திருமழிசை பகுதியில் அவலம்

பரிதாப நிலையில் சாலைகள் திருமழிசை பகுதியில் அவலம்

​​திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 130க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்கு, பாதாள சாக்கடை பல பகுதியில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த சாலையில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து குளம் போல் தேங்கியுள்ளது.இதனால் பகுதிவாசிகள் நடந்து செல்ல கூட முடியாத அளவு சிரமப்பட்டு வருவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் பேரூராட்சி அலுவலகம் செல்லும் குடியிருப்புகள் நிறைந்த சாலையே பரிதாபமான நிலையில் உள்ளது பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை பேரூராட்சியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை