உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி மலைக்கோவிலில் தீப்பிடித்து எரிந்த டூ- - வீலர்

திருத்தணி மலைக்கோவிலில் தீப்பிடித்து எரிந்த டூ- - வீலர்

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவில், பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் மணி, 34. இவர், மலைக்கோவிலில் பங்க் கடை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார். நேற்று முன்தினம் இரவு, மணி தனது, 'பேஷன் புரோ' இருசக்கர வாகனத்தில், திருத்தணி பஜாருக்கு சென்று, கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். பின், இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு, வாகனத்திற்கு கவர் போட்டு மூடிவிட்டு துாங்க சென்றார்.நேற்று காலை எழுந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் முழுதும் தீப்பிடித்து எரிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ