மேலும் செய்திகள்
புறநகர் மின்சார ரயில்களில் அரிசி கடத்தல் அதிகரிப்பு
43 minutes ago
பறிமுதல் வாகனங்கள் வீணாகி வரும் அவலம்
44 minutes ago
கோவிலில் ரீல்ஸ் எடுத்த மூன்று பெண்கள் மீது புகார்
46 minutes ago
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில், கடந்த சில மாதங்களாக சாலையோர மரங்களில் விளம்பர பதாகைகளை ஆணி அடித்து விளம்பரம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால், மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. குறிப்பாக தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, ஏரளமான மரங்கள் மற்றும் சாலையோர மின்கம்பங்களில் விளம்பர பதாகையை வைத்துள்ளது. பள்ளிப்பட்டு கோர்ட் அருகே உள்ள கூட்டு சாலையில் பயணியர் நிழற்குடை உள்ளது. கோர்ட் வளாகம் திறக்கப்பட்டு செயல்பட துவங்கியதும் கடந்த சில மாதங்களாக இந்த பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த முச்சந்தியில் உள்ள அரச மரத்தில் தொடர்ந்து விளம்பர பதாகைகள் தொங்கவிடப்பட்டு வருகின்றன. இதனால், அந்த மரத்தடியில் காத்திருக்கும் பயணியர் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.மரங்களில் ஆணி அடித்து பதாகைகளை தொங்க விடுவதற்கு,பலர் வரிசை கட்டி காத்திருக்கின்றனர். ஆனால், மரக்கன்று நட்டு, அவற்றை பராமரிக்க அவர்களில் யாரும் முன்வருவது இல்லை என்பது தான் வேதனை. சாலையோர மரங்கள் மற்றும் பொது இடங்களில் வளரும் மரங்களில் விளம்பரம் செய்பவர்களிடம் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அபராதம் வசூலிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
43 minutes ago
44 minutes ago
46 minutes ago