உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீடியன் பகுதியில் எச்சரிக்கை இல்லை விபத்தில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

மீடியன் பகுதியில் எச்சரிக்கை இல்லை விபத்தில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

பொன்னேரி : பொன்னேரி - மீஞ்சூர் நெடுஞ்சாலை கடந்த, 2018 ல், இருவழி சாலையாக, மீடியனுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், பொன்னேரி நகரப்பகுதியில் சாலை குறுகலாக இருந்ததால், அங்கு மீடியன் அமைக்கப்படவில்லை.தச்சூரில் இருந்து பொன்னேரி வழியாக மீஞ்சூர் செல்லும் வாகனங்கள், நகரப்பகுதிக்குள் ஒரு வழி சாலையில் பயணித்து, பொன்னேரி அரசு கலைக்கல்லுாரி துவங்கும் இருவழிசாலை பிரிந்து பயணத்தை தொடர்கின்றன.ஒரு வழி சாலை முடிந்து, மீடியனுடன் இருவழி சாலை துவங்கும் பகுதியில் எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை. இதனால் வேகமாக பயணிக்கும் கனரக வாகனங்கள் மீடியனில் மோதி விபத்துக்களில் சிக்குகின்றன.இப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றும் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது. மின்கம்பத்தில் மோதாமல் பயணிக்கும் வாகனங்கள் மீடியனில் மோதி விபத்திற்கு உள்ளாகின்றன. வாகனங்கள் அவ்வப்போது மோதி, மீடியன் பகுதியே சேதம் அடைந்து கிடக்கிறது. நெடுஞ்சாலைத்துறையும், காவல்துறையும் விபத்துக்களை தவிர்க்க எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை.மீடியன் துவங்கும் இடத்தில் சோலாரில் இயங்கும் சிவப்பு விளக்கு பொருத்திடவும், ஒருவழி சாலை முடிந்து இருவழி சாலை துவங்குவதை வாகன ஓட்டிகள் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு ஏதுவாக ஒளிரும் விளக்குகள் மற்றும் எச்சரிக்கை பலகைகளை வைத்திடவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மீடியனில் கம்பிகள்

திருத்தணி - சித்துார் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி நகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் தடுப்பதற்கும் திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் கமலா தியேட்டர் பகுதியில் இருந்து மேல்திருத்தணி வரை தற்போது சாலையின் இருபுறமும் விரிவாக்கம் செய்து, பேவர் பிளாக் கற்கள் பதியப்பட்டுள்ளன.மேலும் இரு வழிச்சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க கடந்த நான்கு மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலை துறையினர் மீடியன் அமைத்தனர். இந்நிலையில் இரு மாதம் முன் சித்துார் சாலை பெட்ரோல் பங்க் அருகே நள்ளிரவில் டிப்பர் லாரி ஒன்று மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.இதில், லாரியின் முன்பகுதி மற்றும் மீடியன் சுவர் சேதம் அடைந்தது. மேலும் சுவர் இடிந்ததால் மீடியனுக்கு அமைத்த பத்து இரும்பு கம்பிகள் நீண்டுள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மீடியனை சீரமைத்து அபாய விளக்கு பொருத்த விட்டால் அதே இடத்தில் மீண்டும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம் காட்டாமல், இரும்பு கம்பிகளை சீரமைத்து மீண்டும் அங்கு மீடியன் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை