உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவேங்கடபுரத்தில் திருக்கல்யாணம்

திருவேங்கடபுரத்தில் திருக்கல்யாணம்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம். தசரத நகர் பூங்காவில் திருவேங்கடமுடையான் திருக்கல்யாண குழு சார்பில் நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம் நடந்தது.மாலை, 5:00மணிக்கு திருவேங்கடபுரம் பொன்னியம்மன் கோவிலில் இருந்து, சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.தொடர்ந்து உய்யாளி சேவை, மாலை மாற்றுதல், பூப்பந்து சங்கல்பம், மங்கல்ய பூஜை, ஓமம் வளர்த்தல் ஆகியவை நடந்தன. அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் யாகம் வளர்த்து, சுவாமிகளுக்கு காப்பு கட்டி, பட்டாடை அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து மங்கள இசை முழங்க, கெட்டிமேளம் கொட்டி, வானவேடிக்கைகளுடன் ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகளுக்கு மாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு, திருகல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது.திருக்கல்யாண வைபோகத்தை தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு தீப ஆராதனை காண்பித்தனர். பக்தர்களுக்கு மாங்கல்ய நாண், மஞ்சள் குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி