| ADDED : ஜூலை 23, 2024 09:49 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டில் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. வெற்றி பெறுவோரருக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் 15,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். இந்த ஆண்டும், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 1-12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், https://tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில், ஆக.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, 044 - 29595450, 8148870609 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.