உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயிலில் கடத்திய மூன்று கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திய மூன்று கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம்: வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்துவதை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று மதியம் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் ஷெரிப் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 1:45 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 1-வது நடைமேடைக்கு வந்தது.ரயிலின் பொது பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து சோதனை 1செய்தனர். அதில், 3 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் காஞ்சிபுரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை