உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம் கூளூர் கிராமத்தில் கனகம்மாசத்திரம் போலீஸ் எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து கூளூர் நோக்கி வந்த ஆந்திர வாகன பதிவு எண் கொண்ட டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் சட்டவிரோதமாக கடத்தி வந்த மணல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் விஜயபுரம் மண்டலம், மல்லாரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், 52 என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி